Ruba fashion academy

Ruba fashion academy we are teaching and designing aari embroidary, beautician, mehandhi, jewel making, tailoring and gla

22/03/2025

Online courses
Aari and mehandi
Only @ ₹3000/-

RUBA FASHION ACADEMY
A Unit Of
RUBA BRIDAL BOUTIQUE

T.nagar, chennai -16

https://youtu.be/9dcm3nvFcME?si=pE3KbEFcclGgxEoy.      எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது ...
17/01/2025

https://youtu.be/9dcm3nvFcME?si=pE3KbEFcclGgxEoy. எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஓரு சவாலை முன்வைத்தார்.

''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

ரூபா பேஷன் அகாடமி ஆரி வடிவமைப்பு, எம்பிராய்டரி டிசைன்கள், தையல், அழகு கலை, மெகந்தி, நூலில் ஆபரணங்கள் தயாரிப்பு, க....

https://youtube.com/shorts/ZpXI_elfeNk?si=KaDeK50e2PW915ik.   *காலம் மாறும்... காட்சிகள் மாறும்...*ஒரு காட்டில் வாத்து க...
15/01/2025

https://youtube.com/shorts/ZpXI_elfeNk?si=KaDeK50e2PW915ik. *காலம் மாறும்... காட்சிகள் மாறும்...*

ஒரு காட்டில் வாத்து குடும்பம் ஒன்று இருந்தது.
அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது.

பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப் பாகவும் இருந்தன.

ஆனால்,
அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது.
அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது.

உடன் பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைக் கண்டாலே பிடிக்க வில்லை.
ஒரு கட்டத்தில்
அதன் தாய் வாத்தே கூட அதை வெறுத்து,
அதை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.

அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது.
நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாக பிறந்தேன்..?
முட்டையிலேயே உடைஞ்சு இறந்து போயிருக்கலாமே..!!\'
என்று வேதனையுடன் பல நாட்கள் அழுது கதறியது.

நாட்கள் ஓடின.
மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின.
இதுவோ உயரமாகவும் மேலும் நிற மற்றும் காணப்பட்டது.
தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு கொண்டை முடிகள் வேறு வளர்ந்தது,
அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று.

தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையிலே வாழ்ந்து வந்தது.
சில வேளைகளில் அன்பாய் அம்மாவையும், சகோதரர் களையும் நெருங்கும்,
ஆனால்,
சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டி விடும்.

மேலும் சில நாட்கள் சென்றது.
அசிங்கமாக இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள்,
பிரகாசிக்கும் பளிச்சென்ற வெண்மை நிறமானதாக மாற ஆரம்பித்தன.

தலையில் நீண்டிருந்த முடிகள்,
அழகான கொண்டையாக மாறிற்று.
இறக்கைகள் பல மடைந்து நீளமாகவும் மாறி விட்டன.
இப்போது அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு,
கண் கொள்ளா அழகுடன் காட்சியளித்தது.

அம்மா வாத்துக்கும், கூடப் பிறந்த மற்ற வாத்துக் களுக்கும் ரொம்பவே ஆச்சரியமாகப் போனது.
அதன் அருகில் நெருங்கக் கூட கூச்சமடைந்து, வெட்கப்பட்டன.

நடந்தது என்ன வென்றால்,
ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டத்தில் முட்டையிட்டுச் சென்று விட்டது.
இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடை காத்து, குஞ்சும் பொறித்து விட்டது.
அது தான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.

ஒரு நாள் வந்தது.
அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றம் அளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு உந்துதல் தோன்றியது.
படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது.

கேலி செய்தவர்கள் வெறுத்து, விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள,
அன்னப்பறவை கம்பீரமாய் வானத்தை நோக்கி உயர உயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது.

*எவர் கண்டார்..*
*உங்களைத் தூற்றுபவர்கள் யாவரும் வாத்து கூட்டங்களாக கூட இருக்கலாம்..*

https://youtu.be/y6YZvJSCnSQ?si=aVA365Io0QgpmYin.  மகிழ்ச்சியை தேடி ஓடாதே..!!.ஒரு சீடன் தன் குருவிடம்'குருவே, எனக்கு வாழ...
13/01/2025

https://youtu.be/y6YZvJSCnSQ?si=aVA365Io0QgpmYin. மகிழ்ச்சியை தேடி ஓடாதே..!!.

ஒரு சீடன் தன் குருவிடம்
'குருவே, எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. என்னதான் பண்றது?' என்று கேட்டான்.
குரு அவனை ஒரு தோட்டத்திற்கு கூட்டி சென்றார்.

அந்த தோட்டத்தில் நிறைய பட்டாம் பூச்சிகள் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தது.
குரு தன் சீடனிடம் 'இங்கு உள்ள பட்டாம்பூச்சியில் ஏதாவதொரு பட்டாம்பூச்சியை பத்திரமாக பிடித்து வா' என்றார். சீடனும் பல பட்டாம்பூச்சிகளை துரத்த, ஒன்றுமே அவனுக்கு அகப்படவில்லை.

அசந்துபோன சீடனை குரு 'சரி விட்டுவிடு, வா நாம் இந்த தோட்டத்தின் அழகையாவது ரசிப்போம் என்று அழைத்தார். இருவரும் தோட்டத்தின் அழகை அமைதியாக ரசித்துக்கொண்டிருக்கும்போது, பல பட்டாம்பூச்சிகள் இருவரின் கைகளிலும் தானாக வந்து அமர்ந்தன.

இதை கண்ட சீடன் 'குருவே குருவே, துரத்திப்பிடிக்க முயலும்போது அகப்படாத பட்டாம்பூச்சிகள், இப்போது அழைக்காமல் கையில் வந்து அமர்வதை பாருங்கள்' என்றான்.

குருவும் "மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் துரத்தி பிடிப்பதல்ல. நீ அமைதியாய் உட்கார்ந்து ரசிக்கும் போதுதான் மகிழ்ச்சி உன்னிடம் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும். அதனால படபடப்போ பரபரப்போ இல்லாமல் எப்போதும் அமைதியாய் இரு. மகிழ்ச்சி உன்னை தேடி வரும் " என்றார்.

வாழ்க்கையை புரிந்தவர்கள் மகிழ்ச்சியை தேடித் தேடி ஓடுவதில்லை.... தேடித்தேடி ஓடுபவர்கள் எப்பொழுதும் ஓடுவதை நிறுத்துவதில்லை..!!.

https://youtube.com/shorts/9t7hmTOA4ss?si=OwdBro-qd-AOI6MA.       *சமயோசித புத்தி."*.பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்...
09/01/2025

https://youtube.com/shorts/9t7hmTOA4ss?si=OwdBro-qd-AOI6MA. *சமயோசித புத்தி."*.

பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள அவரால் முடியவில்லை.

அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது.

நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.

ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார்.
அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.

அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது.

தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு வழியாக முகத்தினை நுழைத்து அந்தப் புகையிலைச் செடியைத் தின்னப் பார்த்தது.

இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டு விட்டுத் திங்காமல் வெறுப்போடு போய் விட்டது.

அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், "மன்னர் அவர்களே, பார்த்தீர்களா?

நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலைக் கேவலம் அந்தக் கழுதைக்குக் கூடப் பிடிக்கவில்லை!" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.

உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே,

"அமைச்சர் அவர்களே, உண்மையைத் தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்தப் பொருள் தான். ஆனால் கழுதைகளுக்குத் தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!" என்றார் ஒரே போடாக!

தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை பீர்பால்.

ஆம்.. நண்பர்களே...

ஒரு மனிதன் வெற்றிக்கு அறிவுக் கூர்மை இருபது சதவீதம் மட்டுமே அணுசரனையாக இருக்கிறது,

சமயோசித ஆளுமையோ எண்பது சதவீதம் துணை புரிகிறது. பரபரப்பானச் சூழலில் பதற்றப்படாமல் சமயோசிதம் ஆகச் சிந்தித்து நடந்துக் கொள்ள வேண்டும்.

சமயோசிதப் புத்தி உள்ளவன் எந்தச் சூழலிலும் பிழைத்துக் கொள்வான்.

வாழ்வில் வெற்றியும் பெறுவான்.

https://youtube.com/shorts/SSsy1gzKEF8?si=MvpwKIJsE-NOR_FS.       அகந்தை கூடாது.                                        ...
04/01/2025

https://youtube.com/shorts/SSsy1gzKEF8?si=MvpwKIJsE-NOR_FS. அகந்தை கூடாது. ஒரு ஊரில் குரு இருந்தார். அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர்.... !

அவருடைய குருகுலத்தில் பல மாணவர்கள் தங்கி வில்வித்தை பயின்று வந்தார்கள்.......

அதில் ஒரு மாணவன் மிகச்சிறப்பாக சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தான்..........!

குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர். . . . !

இதையெல்லாம் கேட்கக் கேட்க, அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது...........!

அது கற்றுக்கொடுத்த குருவையே, அலட்சியமாக நினைக்க வைத்தது. அவனுக்குள் ஒரு தீய எண்ணம் வேர்விட்டது.......!

"இனியும் நான் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது எனக்கும் தெரியுமே.......!

இன்னும் கூட அதிகமாக கற்றுக் கொள்ள எனக்கு இளமையும்,வயதும் இருக்கிறது...!

இனி நான்தான் குரு.பழைய குருவை விரட்டுவேன்.நானே குரு ஆவேன்" என்று எண்ணி ஒரு ஆலோசனை செய்தான்...!

மறுநாள் அவனுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களை அழைத்துக் கொண்டு,

குருவின் குடிலுக்குச்சென்று வாசலில் நின்று சத்தமிட்டான்....!

"குருவே வெளியே வாரும். . .
இனி நான்தான் குரு, நீரல்ல. உம்மோடு போட்டியிட்டு ஜெயிக்க வந்திருக்கிறேன் !

தைரியம் இருந்தால் மோதிப்பாரும். இல்லையென்றால் இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு.....

ஆசிரமத்தை என்னிடம் ஒப்புவியும்"என்றான்...!

குரு இதைச்சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை........!

கொஞ்சம் நிலை குலைந்துப்போனார். ஆனாலும் உறுதியான குரலில் சொன்னார் "போட்டி துவங்கலாம்"....! துவங்கியது போட்டி....

முதலில் குரு அம்பை எடுத்து தூரத்திலிருந்த ஒரு மரத்தை நோக்கி எய்தார்...

அது சரியாய் ஒரு காயை வீழ்த்தியது. சிஷ்யனும் அதேபோல் ஒரு அம்பை எய்ய, அது இரண்டுக் காய்களை வீழ்த்தியது. . . .

சிஷ்யனின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். அடுத்து குரு இரண்டு அம்புகளை ஒன்றாக விடுத்தார். . . !

அதில் சரியாக ஒரு இலையும்,ஒரு காயும் விழுந்தன.

சீடன் அலட்சியமாக மூன்று அம்புகளை,
ஒன்றாய் எய்ய,

அது ஒரு இலையையும் ஒரு காயையும் ஒரு பூவையும் கூட அழகாய் வீழ்த்தியது...
சீடனின் கூட்டம் இன்னும் சத்தமிட்டது !

குரு இப்போது தரையைப் பார்த்து தலைகுனிந்தபடி,

வானத்தை நோக்கி அம்புவிட்டார். அது குறிபார்த்து எய்ததுபோல் விண்ணில் பறந்துக்கொண்டிருந்த...

ஒரு பறவையின் மார்பில் தைத்து அதைக் கீழே விழவைத்தது. . . . .!

சிஷ்யனின் கூட்டம் சற்றே மிரண்டது. சிஷ்யனோ சற்றும் மிரளவில்லை. புன்னகைத்தபடியே அவனும் தலையைக் குனிந்தவாறே ஒரு அம்பை எய்தான். . . .

அவனது அம்போ இரண்டுப் பறவைகளை ஒன்றாக வீழ்த்தியது. சிஷ்யனின் கூட்டம் கூத்தாடியது....!

மரியாதை இன்றி குருவின் அருகே வந்து அவரைச்சுற்றி நின்று ஏளனமிட்டது.

மற்ற சீடர்களின் கண்களில் கண்ணீர். தங்கள் குரு அவமானப்படுத்தப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. . . . !

குரு வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு, தரையில் மண்டியிட்டு, கண்களை மூடிக்கொண்டார்...!

குரு தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டாரோ? எல்லாரும் மௌனமாய் குருவின் முகத்தையே பார்த்தனர்...

திடீரென்று குரு தனது கண்களைத் திறந்து வானத்தை ஏறிட்டுப் பார்த்தார்...

அவர் பார்த்த மாத்திரத்திலேயே, வானத்தில் பறந்து சென்றுக் கொண்டிருந்த சில பறவைகள் பொத் பொத்தென்று கீழே விழுந்தது !

இப்போது சீடனின் முகம் இருண்டது."குருவிடம் இப்படி ஒரு வித்தையை நான் பார்த்ததே இல்லையே".

மனதுக்குள் மிரண்டாலும், அவனும் அவரைப்போலவே மண்டியிட்டு, வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்தான்.

ஒன்று கூட விழவில்லை. பதற்றமாக மீண்டும் பார்த்தான். அப்போதும் எதுவும் விழவில்லை.........!

மீண்டும் ஒரு முறை பார்த்தான். அப்போதும் பயனில்லை. அவமானத்தில் குன்றிப் போனான். . . . !

எழுந்து குருவின் பாதங்களில் விழுந்து அழுதான். "குருவே! எப்போதுமே நீங்கள் மட்டுமே பெரியவர். . . !

என்னை மன்னிப்பீர்களா?" என்றான். குரு அவனை மன்னித்து, கட்டி தழுவிக்கொண்டார்.....!

"நீங்கள் பார்க்கும்போது விழுந்த பறவைகள், நான் பார்க்கும்போது விழவில்லையே.ஏன் குருவே?"

குரு சொன்னார்: "மனதில் தாழ்மை வந்தால்தான் மேன்மை வரும். அகந்தை வந்தால் அழிவுதான் வரும்"....!

ஆம் குருவே, நான் பாவி. ஒன்றும் அறியாத நிர்மூடன்" என்று அவரது பாதத்தைப் பிடித்து அழுதான்...!

குரு சொன்னார், "இப்போது மேலே பார்". பார்த்தான். பறந்துக் கொண்டிருந்த ஐந்தாறு பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன. . . . . !

"மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும். மனத்தால் அடக்கம் உடையவன் கனமடைவான்"....!

work ...

https://youtube.com/shorts/yY-pK-b7lXI?si=RscZPw-U8rMBgTxZ.             மடத்தனம்-சாமர்த்தியம்=================மடத்தனம்-ஒ...
03/01/2025

https://youtube.com/shorts/yY-pK-b7lXI?si=RscZPw-U8rMBgTxZ. மடத்தனம்-சாமர்த்தியம்
=================

மடத்தனம்-

ஒரு அடர்ந்த காட்டில் இரண்டு நண்பர்கள் நடந்துப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவரின் கைகளில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. இன்னொருவரிடம் விளக்கு இல்லை. ஆனால், இரண்டு பேரும் ஒரே பாதையில் நடந்துச் சென்றதால் அவர்களின் பாதை முழுக்கவே வெளிச்சமாகவே இருந்தது.

தனக்கென்று தனியாக விளக்கு எதுவும் வைத்திருக்காத நபரும் நண்பனின் விளக்கொளியில் சந்தோஷமாகவே பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருந்தான். அவனுக்கு விளக்கு பற்றிய சிந்தனை கூட பாதையெங்கும் எழவே இல்லை.

அவர்கள் இருவரும் அடர்ந்த அந்த வனாந்திரத்தின் வெளியே ஒரு கூட்டு சாலைக்கு வந்து சேர்ந்தனர். இப்பொழுது இருவரும் பிரிய வேண்டிய நேரம் வந்திருந்தது. கைகளில் விளக்கை வைத்திருந்தவன் இன்னொருவனிடம் சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்று விட்டான்.

அவன் சென்றதும், விளக்கில்லாதவனைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. இத்தனை நேரம் இருளைப் பற்றி யோசிக்காதவனின் மனதில் இப்பொழுது பயமும் கவ்வ ஆரம்பித்தது. கவலையில் அந்த மனிதன் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.

ஒரு விளக்கை என்னால் தனியாக ஏற்பாடு செய்துக் கொள்ள முடியாமல் போனது எதனால்? என்றும், எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தது எத்தனை மடத்தனம், என்பதை அவன் உணர்ந்தான்.

சாமர்த்தியம்-

பெரும் செல்வம் சேர்த்து வைத்தவன், ஒரு நாள் தன் மனைவியிடம் சொன்னான்
“நான் இறந்துவிட்டால் என்னுடைய பணம் முழுவதையும் என்னுடன் சேர்த்து புதைக்க வேண்டும் , என்னுடைய இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு அந்தபணம் தேவை”

“சரி” என்றாள் மனைவி

“நீ எனக்கு சத்தியம் செய்து கொடு “ என்றான் கணவன். அவளும் சத்தியம் செய்தாள்.

இந்த நிகழ்ச்சி நடக்கும் போது மனைவியின் தோழியும் உடனிருந்தாள்.

திடீரென கணவன் இறந்துவிட அடக்கத்தின் போது ஒரு சிறிய கவரை சவப்பெட்டியினுள் போட்டாள், பின்பு அடக்கம் முடிந்தது. தோழி கேட்டாள் “உன் கணவன் சொன்னபடி நீ பணத்தைபோட வில்லையே”

“நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள், வாக்கு தவற மாட்டேன். நான் தான் சிறிய கவர் ஒன்னு போட்டேனே பார்க்கலையா” என்று திரும்பி கேட்டாள்.

“உன் கணவன் நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தானே”

“ஆமாம் எல்லாவற்றையும் என்பேரில் ஒரு பேங்க் அக்கவுண்டில் போட்டு கணவரது பெயரில் செக் எழுதி அந்த கவரில் வைத்து போட்டேன்“ என்றாள்.

அவளின் சாமர்த்தியத்தை கண்டு, தோழிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது.

https://youtu.be/MJ3f8dznm4k?si=W9a_BvxTgKxRn_wO.           *தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல....* வாழ்க்கை கடவுள் கொடுத...
19/12/2024

https://youtu.be/MJ3f8dznm4k?si=W9a_BvxTgKxRn_wO. *தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல....*

வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.

புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்” என்பதே இந்த தியானத்தின் தாரக மந்திரம்.

அது எப்படி என்கிறீர்களா? உதாரணமாக, தாகம் எடுத்தால் நீர் குடிக்கிறோம். இதில் தாகத்தை மறந்து விடுங்கள். நீரை விட்டு விடுங்கள். மீதம் இருப்பதோ தாகம் தணிந்த மனநிறைவு. அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்.
உற்று நோக்கினால் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சின்னச் சின்ன விஷயங்களில் மனநிறைவு உணர்ந்திடுவீர்கள். ஆனால் மனித மனம் எப்பொழுதும் எதிர்மறையாகவே நினைக்கிறது. தனக்கு நேரும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் பெரிதாக எண்ணி வருந்துகிறது. நண்பர்களுடன் உரையாடும் போதும் மகிழ்ச்சியாக இல்லாமல் வருந்திப் புலம்புகிறோம்.

துன்பமயமானது வாழ்க்கை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மை வேறு. எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. சிறு சிறு விஷயங்களில் கிடைக்கும் மன நிறைவை ஒதுக்காமல் முழுமையாக உணர்ந்திடுங்கள். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையின் மேல் நம்பிக்கை ஏற்படுவதை உணர்வீர்கள்.

உங்கள் நண்பரைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? அதை முழுமையாக உணர்ந்திடுங்கள். “உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று நண்பரிடம் கூறுங்கள். பூவிலிருந்து வரும் நறுமணம் எங்கும் பரவுவது போல உங்களுடைய மகிழ்ச்சி, சந்தோஷம், மனநிறைவு உங்களின் வாய் வழியாக தொண்டை, இதயம் என உடல் முழுவதும் சென்று நிறைவதாக உணர்ந்திடுங்கள். மகிழ்ச்சியை முழுமையாக அனுபவியுங்கள்.

இதைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் உலகமே புதுமையாக தெரியும். தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை சேகரித்திடுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது.

Address

Renganathan Street, T. Nagar
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Ruba fashion academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruba fashion academy:

Share