Design for The Lord

Design for The Lord Spreading the Gospel through Bible verses wall papers and Providing designing service like Posters,

09/03/2026

Our customised Christian T-shirts are specially designed for churches, youth groups, and outreach ministries who want to share the message of Jesus in a bold and stylish way.

Perfect for events, conventions, mission trips, choir teams, youth camps, and evangelism outreaches — now available at an amazing 50% OFF for a limited time!

Unite your team. Wear the message. Spread His love wherever you go. ❤️✝️

📲 Bulk orders available
🎨 Custom designs with your verse, logo, or theme
🚚 Easy ordering via WhatsApp


09/03/2026
26/02/2026

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Half Price. Full Faith. ✝️🔥Your church style just got a powerful upgrade!Make your group stand out while standing strong...
16/02/2026

Half Price. Full Faith. ✝️🔥
Your church style just got a powerful upgrade!

Make your group stand out while standing strong in faith.
Our customised Christian T-shirts are specially designed for churches, youth groups, and outreach ministries who want to share the message of Jesus in a bold and stylish way.

Perfect for events, conventions, mission trips, choir teams, youth camps, and evangelism outreaches — now available at an amazing 50% OFF for a limited time!

Unite your team. Wear the message. Spread His love wherever you go. ❤️✝️

📲 Bulk orders available
🎨 Custom designs with your verse, logo, or theme
🚚 Easy ordering via WhatsApp


*இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் நம்முடைய தேவன்; அவர் மரணபரியந்தம் நம்மை நடத்துவார்."*(சங்கீதம் 48:14) ...
01/01/2026

*இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் நம்முடைய தேவன்; அவர் மரணபரியந்தம் நம்மை நடத்துவார்."*
(சங்கீதம் 48:14)


நமக்கு முன்பாகச் செல்பவர் பெரியவர். நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர். புதிய ஆண்டில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிலும், நம் தேவன் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துவாராக! சென்ற ஆண்டு முழுவதும் நம்மைக் காத்தவர், இந்த புதிய ஆண்டிலும் நம் கரங்களைப் பிடித்து அதிசயமான பாதைகளில் நடத்துவார்.

இந்த 2026-ஆம் ஆண்டு உங்கள் வாழ்விலும், உங்கள் குடும்பத்திலும் கர்த்தருடைய வழிநடத்துதலும், சமாதானமும் பெருகுவதாக!

💐 *HAPPY NEW YEAR* 💐

- தேவதாசன் பிரேம்குமார்,
9962672124
*தேவனின் பாதத்தில் தாசர்கள்*
*இரவு ஜெபங்கள் ◆ சுவிசேஷ ஊழியங்கள் ◆ ஊழியர்கள் கூடுகை*
திருமுல்லைவாயில்,
சென்னை - 600 062.
தமிழ்நாடு, இந்தியா.

*For this God is our God for ever and ever: he will be our guide even unto death.*
(Psalm 48:14) KJV

The one who goes before us is Great. The one who called us is Faithful. In every step you take in this New Year, may our God continue to lead you! He who protected us throughout the past year will hold our hands and lead us through wondrous paths in this New Year as well.

May God’s guidance and peace abound in your life and your family throughout this year 2026!

💐 HAPPY NEW YEAR 💐

- Servant of God. Premkumar,
9962672124
*Servants at God's Feet*
*Night Prayers ◆ Gospel Ministries ◆ Minister's Meet*
Thirumullaivoyil,
Chennai - 600 062
Tamilnadu, India.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினா...
01/11/2024

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஏசாயா 40:31

ஆம்! கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புது பெலன் அடைவார்கள்... கர்த்தருக்கு காத்திருக்க கூடிய அனுபவம் அருமையானது... ஒருவேளை ஒரு காரியத்திற்காக காத்திருத்தல் நம்மை சோர்வடைய செய்யலாம். ஆனால், கர்த்தருக்காக காத்தருத்தல் நம்மை புது பலனை அடைய செய்யும்.

*இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.* (ஏசாயா 40:30)

இளைஞறும் வாலிபரும் களைப்படைந்து சோர்ந்து அதனால் இடறிப்போனாலும்.

வசனம் சொல்கிறது...

*சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்* ( ஏசாயா 40:29) ஆமென். ஒரு வேளை நீங்கள் ஏதோ ஒரு காரியத்தினிமித்தம் சோர்ந்து போய் காணப்படுகிறீர்களா? பயப்படாதீர்கள், கலங்காதீர்கள், கர்த்தருக்கு காத்திருங்கள். அவர் உங்களை புதுபெலன் அடையச்செய்து, சோர்ந்த உங்களை ஒரு கழுகைப்போல செட்டைகளை அடித்து எழும்ப கிருபை செய்வார்... கழுகானது செட்டைகளை அடித்து எழும்பினால் அது கீழே பறக்காதுங்க, அது பறக்கிற உயரமே வேறுங்க...

அப்படி நீங்கள் உயரே பறக்கக்கூடிய பலனை அடையும்போது, நீங்கள் ஓடினாலும் இளைப்படைய மாட்டீர்கள், நடந்தாலும் சோர்ந்து போகமாடீர்கள். *உங்கள் நடையும், ஓட்டமும் கெம்பீரமாயிருக்கும்!*

*கர்த்தர் தாமே இந்த நவம்பர் மாதம் முழுவதும் உங்களை ஆவியின் அபிஷேகத்தினால் நிரப்பி புது பெலன் அடைய செய்து அவருக்காக அதிகதிகமாய் ஓட கிருபை செய்வாராக. உங்களை ஆசீர்வதித்து, பாதுகாத்து வழி நடத்துவாராக.*

💐 *HAPPY NOVEMBER* 💐

- தேவதாசன். பிரேம்குமார்,
9962672124
*தேவனின் பாதத்தில் தாசர்கள்*

ஊழியர்கள் கூடுகை 🔶 இரவு ஜெபங்கள் 🔶 சுவிசேஷ ஊழியங்கள்

திருமுல்லைவாயில்,
சென்னை - 62

*முக்கிய அறிவிப்பு**கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நம் ஊழியர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரும் பாதுகாப்பாக இர...
15/10/2024

*முக்கிய அறிவிப்பு*

*கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நம் ஊழியர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்காகவும் ஜெபித்துக்கொள்கிறோம். நீங்களும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.*

தேவதாசன். பிரேம்குமார் 9962672124

*நாம் நீதியானவைகளை செய்து, அநேகரை நீதிக்குட்படுத்தி  நட்சத்திரங்களாய் பிரகாசிக்க தேவன் உதவிசெய்வாராக!**கர்த்தர் தாமே இந்...
01/10/2024

*நாம் நீதியானவைகளை செய்து, அநேகரை நீதிக்குட்படுத்தி நட்சத்திரங்களாய் பிரகாசிக்க தேவன் உதவிசெய்வாராக!*

*கர்த்தர் தாமே இந்த அக்டோபர் மாதம் முழுவதும் உங்களை ஆசீர்வதித்து, பாதுகாத்து நடத்துவாராக.*

💐 *HAPPY OCTOBER* 💐

- தேவதாசன். பிரேம்குமார்,
9962672124
*தேவனின் பாதத்தில் தாசர்கள்*
ஊழியர்கள் கூடுகை * இரவு ஜெபங்கள் * சுவிசேஷ ஊழியங்கள் திருமுல்லைவாயில்,
சென்னை - 62

20/09/2024

இராஜ்யத்தை அசைக்கத்தக்க சாட்சியாவதற்கு,
அக்கினி சூளையிலும் போகத்தக்க தைரியமும், அர்ப்பணிப்பும் தேவை!

*"தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்."*புலம்பல் 3:25*ஆம். தமக்கு காத்தி...
01/09/2024

*"தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்."*
புலம்பல் 3:25

*ஆம். தமக்கு காத்திருக்கிறவர்களும், தம்மை தேடுகிற ஆத்துமாக்களுக்கும் கர்த்தர் நல்லவராய் இருக்கிறார்.*

இங்கு எரேமியா எருசலேமின் அழிவுக்காகவும், யூதாவின் பொல்லாத ஜனங்களுக்காகவும் புலம்புகின்ற இந்த காரியத்தில், இந்த 3ம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் இருந்து அவர் சொல்லும்போது "ஆண்டவருடைய சின்னத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்"
(புலம்பல் 3:1) என்று ஆரம்பிக்கிறார். அப்படியென்றால் தேவனின் கோபத்தினாலே ஜனங்கள் மாத்திரமல்ல, நானும் பாதிக்கப்பட்டேன் என்று. தான் பாதிக்கப்பட்டதாகவும் உணர்ந்து அந்த பாரத்தின் மிகுதியினாலே புலம்புகின்றார்.

ஜனங்கள் பாவம் செய்ததினால் தேவனுடன் இருந்த உறவு துண்டிக்கப்பட்டதால் எப்படி அழிந்தோம் என்றும், ஜனங்களின் பாவங்கள் எப்படி பாதித்தது என்றும் விவரிக்கிறார். பாவம் நிறைந்த நிலையில் தேவன் தங்களை கைவிட்டதாக ஜனங்கள் உணர்ந்தார்கள். கர்த்தர் நம்மை விடுவிப்பார் என்ற நம்பிக்கையைக் கூட ஜனங்கள் இழந்து போனார்கள். ஆனால் எரேமியா நம்பிக்கையை விடவில்லை. ஜனங்கள் கர்த்தரை தேடினால் அவர் நமக்கு இறங்குவார் என்று கூறுகிறார்.
ஜனங்கள் கர்த்தரை தேடினால் அவர் நமக்கு இறங்கி, கிருபை செய்வார்! நம்மை இரட்சிப்பார்! நமக்கு உதவுவார்! என்று சொல்கிறார்.
ஜனங்களை தண்டிப்பதன் மூலம் தேவன் சந்தோஷப்படுகிறதில்லை என்கிறார்.
அதனால் பாவத்துக்கு வரும் தண்டனை குறித்து முறையிடாமல் பாவத்திற்காக வருந்தி, நம்முடைய வழியை சோதித்து அறிந்து, கர்த்தரிடத்தில் திரும்பினால் கர்த்தர் மனம் இரங்குவார் என்று அங்கு ஜனங்களுக்கு சொல்லுகிறதை புலம்பல் 3:40 பார்க்க முடிகிறது. நம்முடைய கைகளை மாத்திரமல்ல இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனுக்கு ஏறெடுக்கக்கடவோம். என்கிறார்(புலம்பல் 3:41).
தேசத்தின் ஜனங்களுக்காக அழுகிற எரேமியாவை பார்க்க முடிகிறது(புலம்பல் 3:48,50). ஆழமான கிடங்கிலிருந்து கர்த்தாவே உம்முடைய நாமத்தை பற்றி கூப்பிட்டேன். உம்மை நோக்கி கூப்பிட்டேன் நீர் என் அருகில் வந்து பயப்படாதே என்றீர். என் பிராணனை மீட்டுக்கொண்டீர். என்கிறார். (புலம்பல் 3:55-57).

*ஆம்! கர்த்தர் நல்லவர். நாம் அவரை தேடும் போது தான் அதை புரிந்துகொள்ள முடியும். நாம் அவருக்கு காத்திருக்கும் போதுதான் அவர் நல்லவரென்பதை அறிந்து கொள்ள முடியும்.*
*ஆண்டவர் நம்மை என்றென்றைக்கும் கைவிடமாட்டார். ஒரு சில நேரங்களில் சஞ்சலங்கள் இருந்தாலும், அவர் கிருபையின்படி இறங்குவார்.*
(புலம்பல் 3:31,32)

*சஞ்சலங்கள் போராட்டங்கள் நம் வாழ்க்கையில் இருந்தாலும், நாம் இவர் இரட்சிப்புக்கு காத்திருக்க வேண்டும்.* (புலம்பல் 3:26)
*நாமும் நம்முடைய சூழ்நிலைகண்டு துவண்டு போகாமல் கர்த்தரை தேடினால், கர்த்தர் நம்மை கண்டு, நம் கூப்பிடுதலைக் கேட்டு, நமக்கு இரங்குவார். அதனால் பாவத்துக்கு வரும் தண்டனை (துன்பத்தை) குறித்து தேவனிடத்தில் முறையிடாமல், பாவத்திற்காக வருந்தி, நம்முடைய வழியை சோதித்து அறிந்து, கர்த்தரிடத்தில் திரும்பினால், நம்முடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் திருப்பினால், கர்த்தர் மனம் இரங்குவார். நம் சூழ்நிலையை மாற்றுவார். நம் காரியங்களை நன்மையாக மாற்றுவார். நம்மை விடுவிப்பார். நம் பயத்தை போக்குவார். சந்தோஷத்தை கொடுப்பார். நம்மை ஆசீர்வதிப்பார்.*

*"நாம் நிர்மூலமாகாதிருக்கிறதே கர்த்தருடைய கிருபை தானே!"* (புலம்பல் 3:22)

*கர்த்தர் தாமே இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உங்களை ஆசீர்வதித்து, பாதுகாத்து நடத்துவாராக.*

💐 *HAPPY SEPTEMBER* 💐

👆- தேவதாசன் பிரேம்குமார்,

9962672124

*தேவனின் பாதத்தில் தாசர்கள்*
ஊழியர்கள் கூடுகை * இரவு ஜெபங்கள் * சுவிசேஷ ஊழியங்கள் திருமுல்லைவாயில்,
சென்னை - 62

Address

Srinagar Colony, Thirumullaivoyil
Chennai
600062

Alerts

Be the first to know and let us send you an email when Design for The Lord posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Design for The Lord:

Share