18/11/2014
மூக்குத்தி என்பது மூக்கில் துளையிட்டு அணியும் ஆபரணம். இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன.பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். பெரும்பாலும் மூக்குத்தி உள்ளிட்ட மூக்ணிகள் தங்கத்திலேயே செய்யப்படுகின்றன.வெள்ளி, பித்தளையும் பயன்படுவதுண்டு.
வரலாறு
மூக்குத்தி பற்றி பழைய இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. சோழர்,பாண்டியர்.கால சிற்பங்கள் ஓவியங்கள் போன்றவற்றிலும் காணப்படவில்லை. பழந்தமிழகத்திலும், வடஇந்தியாவிலும் பழங்காலத்தில் மூக்குத்தி அணிந்தாக தெரியவில்லை. நிறைய அணிகலன்களுடன் காணப்படும் பஹ்ரூத் சிற்பங்களிலோ, பைரா, புத்தகயா, கவுசம்பி, குசானர்களின் சிற்பங்கள் அஜந்தா ஓவியங்களிலோ, உதயகிரி சிற்பங்களிலோ மூக்கில் அணி எதுவும் காணப்படவில்லை. 17ஆம் நூற்றாண்டுக்கு பிறகே இந்தியாவில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றில் மூக்குத்தி காணயியலுகிறது. மதுரை மீனாட்சிக்கும்,கன்னியாகுமரியின் குமரியம்மனுக்கும் உள்ள மூக்குத்திகள் பிற்காலத்தில் அணிவிக்கப்பட்டவை என்ற கருத்து உள்ளது. மூக்குத்தி அணியும் பழக்கம் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மூக்குத்தி வகைகள்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்ட மூக்கணிகள் பிரபலமாகவுள்ளன. நாதையா எனப்படும் வெளியில் உள்ள ஒரு வளையமும்,அத்துடன் ஒரு சங்கிலியும் இணைக்கப்பட்ட மூக்கணி ராஜஸ்தானில் செல்வாக்குடன் உள்ளது. நாத் மற்றும் நாக் அணி, ஜம்மு காஷ்மீரில் பரவியுள்ள மூக்கணி. மூக்குத்தி என்பது தமிழகத்தில் பரவலாக அணியப்படுகிறது மேற்கு வங்கத்தில் புல்லாக்கு அணியப்படுகிறது. உ.பி. யில் முர்க்கிலா, எனப்படும் அணிஅணியப்படுகிறது. நாத்து, பூங்க், மூக்கு கடா ஆகியவை ஆந்திரத்தின் மூக்கணிகள். மகாராஸ்டிராவில் முத்து கோர்க்கப்பட்ட வளையமுள்ள மூக்கணியை அணிகிறார்கள். அரியானாவில் அணியப்படுவது புர்லி, கோக்கா, நாத், லாங்க் அகியவையாகும். பீகாரில் நாக்புல், சந்திரா, சொக்கி, ஜுல்னி, தோராபுல் அகிய மூக்கணிகள் அணியப்படுகின்றன ஒடிசாவின் மூக்கணிகள் ஜாரியாபுலி, கைலேகி ஆகும். இவற்றுள் விலையுயர்ந்த அல்லது சாதாரண கற்கள் பதிக்கப்படுவதுண்டு. இம்மாநில பழங்குடி மக்கள் இரு மூக்குகளிலும் இரு வளையங்களும் நடுவில் ஒன்றுமாக மூக்கணிகளை அணிகின்றனர்.
காரணமும் பயன்களும்
மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு என்கிறார்கள்.
கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புதான் மூக்குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல்படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல்பட வைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தில் தஙக் முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே மூக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொணர்வதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க மூக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
ta.wikipedia.org